×

மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: பருவமழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மால்டா நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ – எட்டினே – அபெலா உடன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், துறையின் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மால்டா நாட்டை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டர். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்: மழைக்காலங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அதே அளவில்தான் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 200 இடங்கள் கிடைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளது. மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும். பள்ளிகளிலும் தொடர்ந்து காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற காய்ச்சல் முகாம் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 3 குழந்தைகள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்தது குறித்து அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மால்டா நாட்டு பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பின்  இரு நாடுகள் இடையே மருத்துவ சுற்றுலா அதிகரிக்கும். இங்குள்ள மருத்துவ பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister Ma. Subramanyan ,Chennai ,Supremanian ,Minister Ma. Subramanian ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...